tamilnadu

img

பூஜ்ஜியத்திற்கு போகும் இந்தியாவின் ஜிடிபி!

‘மூடிஸ்’ நிறுவனம் எச்சரிக்கை

புதுதில்லி, மே 9- நடப்பாண்டில் இந்தியாவின் பொரு ளாதார வளர்ச்சி பூஜ்ஜியமாகவே இருக் கும் என்று சர்வதேச முதலீட்டாளர் சேவை நிறுவனமான ‘மூடிஸ்’ கூறியுள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு மேலும் கூறியிருப்பதாவது: “வேலையின்மை அதிகரிப்பு, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மந்தம், உற்பத்திக் குறைவு, கிராமப்புற குடும்பங்க ளில் பணப் பற்றாக்குறை, நிதிச்சிக்கல் போன்றவற்றால் கடந்த சில ஆண்டுகளா கவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி யின் தரம் குறைந்து வந்தது.

இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங் கால் இந்தியாவின் உற்பத்தித்துறை, சேவைத் துறை முடங்கி, பொருளாதாரச் செயல் பாடு ஸ்தம்பித்துள்ளது. இதனால், நடப்பா ண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) பூஜ்ஜியமாகவே இருக்கும். கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு ஒரு காரணம் என்றாலும், ஏற்கெ னவே இருந்த பொருளாதாரப் பிரச்சனை களை, நிறுவனங்களின் பலவீனத்தை அடையாளம் கண்டு அதை நிவர்த்தி செய்ய இந்திய அரசின் கொள்கைகள் வலு வாக இல்லாததுதான் பொருளாதாரச் சரிவுக்கும், அரசின் கடன் அதிகரிப்புக்கும் முக்கியக் காரணங்கள் ஆகும்.

நடப்பாண்டில் வேலையின்மை அதி கரிப்பு, புதிய வேலைவாய்ப்பு உருவாக் கத்தில் மந்தம், உற்பத்திக் குறைவு, கிரா மப்புற குடும்பங்களில் பணப் பற்றாக் குறை, நிதிச் சிக்கல் போன்றவை வரும் காலத்தில் அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கும். நிதிப் பற்றாக்குறை 5.5 சத விகிதம் வரை அதிகரிக்கலாம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் தரமதிப்பீடு ‘பிஏஏ2’ என்று இருந்தது. ஆனால் பொருளாதார வளர்ச்சிக் குறைவால் அந்த ரேட்டிங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கிறது’’. இவ்வாறு மூடிஸ் நிறுவனம் கூறி யுள்ளது.
 

;